உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு!

டெல்லி: உள்ளாட்சி தேர்தல் வழக்கு தொடர்பான தீர்ப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு நாளை வழங்கவுள்ளது.


தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளாக நடத்தப்படாத உள்ளாட்சித் தேர்தலை டிசம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.